Friday, August 1, 2014



ஏன்  ஏங்குகிறாய் இன்று?
நெஞ்சே ஏன் ஏங்குகிறாய்?
நினைத்த அன்றே
அவள் விழி பார்த்து கூரியிருக்கலாமே? அன்றே,
என்று ஏன் ஏங்குகிறாய்? இன்று

கூர வேண்டும் என்று
 சென்றாயே அருகில் அன்று,
கூரியிருகலாமே அன்றே,
என்று ஏன் ஏங்குகிறாய் இன்று

இதயம் இடம் மாறியதே என்று
அவளிடம் கூரியிருகலாமே?  அன்றே
என்று இதயமே
ஏன் ஏங்குகிறாய் இன்று?

நாணத்தால் நாளை சொல்லலாம் என்று
நாணி திரும்பினாயே  அன்று
நெஞ்சே அன்றே கூரியிருக்கலாமே?  என்று
ஏன் ஏங்குகிறாய் இன்று?

நாளை வருமே நன் நாள்
நாளை கூரலமெ என்று
அன்று எண்ணினாயே அன்றே
கூரியிருகலாமே?  என்று
ஏன் ஏங்குகிறாய் இன்று ?

பிறந்த தினம் அன்று 
பரிசுடன் சென்று கூரலாமே?
என்று எண்ணினாயோ  அன்று,
அன்றே கூரியிருக்கலாமே?  என்று
ஏன் ஏங்குகிறாய் இன்று?

காலத்தின் கட்டாயத்தால்
இன்றோ அவள் பிறன் மனைவி.
பிறன் மனைவியானதால் அவளை
நினைக்கவும் முடியாமல்,
மறக்கவும் முடியாமல் தவிகின்றாயே  இன்று

என் காதல் சொல்லி தோற்று இருந்தால்
பரவாயில்லை என்று
இன்று ஏங்குகிகின்றாயே?
அன்றே கூரியிருக்கலாமே?என்று
ஏன் ஏங்குகிறாய்அவளுக்காய்  இன்று?
                                                                                  by:
                                                                                       mirasia
அநாதரவாய் ஆனேன் 
உடைந்த உளத்திலே உதிரம் உள்ளதடா
நீ எனை அறியவில்லை - என்று
கூரிய வார்த்தையால் - நான்
அநாதரவாய் ஆனேன்.
                                                       by:
                                                           mirasia
சூது செய்வார் 
உனக்கும் எனக்கும் இடையில்
ஒருவரும் வேண்டாம்
தூது என்ற பேரில்
சூது செய்வார்.

ஆச்சரியம்
என் கண்ணும் காதலால் கலங்கியது
என்ன ஆச்சரியம்!
இந்த காதல் என்னையும் கூட
தினற வைத்து  விட்டதே.
                                                           by:
                                                                mirasia  
தோல்வி
எல்லோர் வாழ்விலும்
 வெற்றியின் முதல் படி - என் 
வாழ்வின் சறுக்கு மரம் 
ஏற்க  மறுக்கவில்லை 
முயற்சிக்கவே மறுக்கின்றேன்.

மறக்க முடியாத வலி - வலி
என் வாழ்வின் வழி - வழி
காண்பிப்பது மயான பூமியா? அல்லது
மெய்யான பூமியா?   - எல்லோரையும்
இறைவன் ஒரு தேவைக்காய் படைத்தார்
என்னை பிறர் தேவைக்காய்  படைத்தார்.

உறங்கும் போது நினைப்பது
சொர்கத்திற்கு செல்ல வேண்டுமென்றல்ல
இந்த நரகத்தை விட்டு செல்ல வேண்டுமென்று 
வாழ்வில் பல நிமிட அனுபவம் சந்தோஷம்
வாழ்வில் பல வருட அனுபவம் சோகம்.

பூமிக்கு பருவகால மாட்டம் உண்டு -ஆனால்,
என் வாழ்வுக்கு ஒரே பருவம் அது - சோகம்.  
சுதந்திரமாய் வாழ நினைக்கவில்லை 
சந்தோசமாய் வாழ நினைக்கிறேன்.
                                                                         by:
                                                                           mirasia

என் பார்வையில் 
இரவு 
"மின் மினிப் பூசி விழுந்த கறுப்பு காகிதம் "

அம்மா
"அன்புக்கு சரியான எடுத்து காட்டு"

ஆசான் 
"அறிவின் வழிகாட்டி "

காதல்
"விடையில்லா வினா"

நட்பு 
"உன்னை முழுமையாக புரிந்த உறவு"

குழந்தை
"சந்தோஷத்தின்  தரிப்பிடம்"

தென்றல் 
"உண்மையான ஆறுதல்"

முத்து
"கடல் தரும் பொக்கிஷம்"

உன் புன்னகை 
"கோபத்தை தடுக்கும் மருந்து"
                                                                by:
                                                                    mirasia